அமரர். தியாகராஜா சுந்தரலிங்கம் (Retired Superintendent – Water Works Department, Maligawatta)

யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சுந்தரலிங்கம் அவர்கள் 10.08.2020ஆம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற இசைஞானி (Retired Graduate Teacher) அவர்களின் அன்புக்கணவரும், குருபரன் (கனடா) உமாசுதன் (கொழும்பு) ஆகியோரின் அன்புத்தந்தையும், நிதி (கனடா) கௌசல்யா (Rupavahini) ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான திருமதி. மேளனேஸ்வரி, மகேஸ்வரி, Dr. வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் விநாயகலிங்கம், புஷ்பராணி, தேவிராணி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.08.2020ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரையும் மற்றும் 12.08.2020ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலை, கல்கிசையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து காலை 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி மதியம் 01.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு –
திரு. சு. உமாசுதன் – 077 7325776
திரு. சு. குருபரன் (கனடா) – 0014 1664 88236
திருமதி. பா. ஜெயச்சந்திரன் (Bobby) – 077 6509721