அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை புனரமைப்பு திட்டம்.

1. திட்ட முன்னுரை:

அரியாலை மண் பல கல்விமான்களையும் விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும் உருவாக்கி, ஊருக்கும் ஈழத் தமிழர் சமூகத்துக்கும் பெருமை சேர்த்த மண். மக்கள் தாமாக முன்வந்து ஆற்றும் பொதுச்சேவையினைத் தனது பண்பாடாக வளர்த்து, மக்கள் தொண்டின் மூலம் பல நிறுவனங்களை உருவாக்கி வளர்த்தெடுத்த ஊர் நமது அரியாலையூர். தாயகத்திலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பல சாதனைகளை புரிந்தவர்களாக அரியாலையூரின் மைந்தர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். ஏனைய பல ஊர்கள் அரியாலையினை முன்னுதாரணமாகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களைத் தங்கள் ஊர்களில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வந்தமையினையும் நாம் அறிவோம்.

எமது ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை எமது ஊரின் அடையாளங்களின் ஒன்றாக இருக்கிறது. எமது ஊரைச் சார்ந்தோர் பலரது முதற்பாடசாலையாக அமைந்து அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த பாடசாலையாக இது அமைகிறது. இப் பாடசாலை மண்ணில் உருண்டு, புரண்டு விளையாடிய பல பிள்ளைகள் பின்னாளில் பல சாதனைகளைப் புரிந்த ஆளுமையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள். எமது பார்வதி பாடசாலை குறித்து பெருமித உணர்வு எம் நினைவுகளில் இன்றும் நிலைத்திருக்கிறது.

இருந்தும், எம்மில் பலருக்கு கல்வியும், கலையும், பண்பாடும் வழங்கிய எமது ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் தற்போதய நிலை நம்மனைவருக்கும் கவலை தரும் வகையில் அமந்திருப்பது எம்மை வேதனைக்குள்ளாக்குகிறது. எமது பாடசாலையின் தற்போதய நிலையை நேரடியாகப் பார்த்து, பாடசாலையின் இன்றைய நிலை குறித்த தகவல்களைத் திரட்டிய பின்னர் இனியும் பாடசாலையினை முன்னேற்றுவது குறித்து செயற்படாமல் பாராமுகமாக நாம் இருக்க முடியாது என உணர்கிறோம்.  இதனால் எமது பாடசாலையின் அவலநிலையினை நீக்கி, எமது பாடசாலையினைப் புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் திட்டமொன்று வகுத்திருக்கிறோம். இத் திட்டத்தைத் தங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இச் சிறுபிரசுரத்தின் நோக்கமாகும்.

இத் திட்டத்தின் விபரங்களை முன்வைப்பதற்கு முன்னர் பாடசாலையின் தற்போதய நிலை குறித்து சில தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தம் எனக் கருதுகிறோம்.

2. பாடசாலையின் தற்போதய நிலை.

ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை பாடசாலையில் தற்போது முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான 181 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். பாடசாலையின் வகுப்பறைகள் சிதைவுற்றவையாக உள்ளதுடன் மாணவர்கள் விரும்பி பாடசாலைக்கு வருகை தருவதற்கு இடையூறு விளைவிப்பவையாகவும் உள்ளன. பாடசாலையில் வகுப்பறைகள் குன்றும் குழிகளும் நிறைந்தவையாகவும் காணப்படுகின்றன. பாடசாலைத் தளபாடங்கள் மிகப் பழமையானதாகவும் பழுதடைந்தவைகளாகவும் உள்ளன. ஊசலாடிக் கொண்டிருக்கும் நாற்காலிகளில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு அமர்ந்தே தமது கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் பாடசாலையின் மாணவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.  பாடசாலையின் சுற்றுப்புற மதிலும் பழுதடைந்து சரிந்து வீழும் தறுவாயில் உள்ளது.

இலங்கையின் பிரதான போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றான A 9 வீதியில் அமைந்திருக்கும் இப் பாடசாலையின் தற்போதய நிலை எமது ஊரின் பெருமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலேயே இருக்கிறது. பாடசாலையில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களதும், எதிர்கால மாணவர்களதும் நன்மை கருதி இப் பாடசாலையைப் புனரமைக்க வேண்டியது இப் பாடசாலையின் பழைய மாணவர்களதும், ஊரவர்களதும் கடமையாக அமைகிறது.

பாடசாலையின் தற்போதய நிலையை வெளிப்படுத்தும் சில ஒளிப்படங்கள் கீழே தரப்படுகின்றன.

3. பாடசாலை புனரமைப்புத் திட்டம்.

பாடசாலையினைக் கட்டம் கட்டமாகப் புனரமைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு, அத் திட்டம் பாடசாலை அதிபரோடு கலந்தாலோசிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சி ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எமது பாடசாலையின் புனரமைப்புப் பணியினைக் கல்வித் திணைக்களத்தின் ஊடாகவோ அல்லது ஏனைய அரச கட்டமைப்பகளின் ஊடாக புனரமைக்க முடியுமா என்பதனையும் நாம் ஆய்வு செய்தோம். பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் எமது பாடசாலையினை அரச நிதியில் புனரமைப்பதற்கான முயற்சிகள் வெற்றிபெற முடியவில்லை என்பதனையும், இந் நிலையில் மாற்றம் ஏதும் எற்படுதற்கான நிலைமைகள் குறைவாக உள்ளமையினையும் நாம் அறிய முடிந்தது.

கல்வித் திணைக்களத்தின் ஊடாகச் புனரமைப்பு செய்வதானால் கல்வித் திணைக்களத்தின்  தொழில்நுட்ப அதிகாரியின் (T.O – techical officer) மேற்பார்வையில் புனரமைப்பு செய்ய வேண்டும். ஆனால் அரச நிதியில் இப்போது உடனடியாக கல்வித் திணைக்களத்தின் ஊடாக புனரமைப்பு செய்வது சாத்தியம் அற்றது. வேறு நிறுவன அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் செய்வதும் உடனடியாக சாத்தியம் அற்றது.

பாடசாலையினை புனரமைப்பதில் நாம் காலம் தாழ்த்தினால் மாணவர் தொகை மேலும் வீழ்ச்சியடைந்து, பாடசாலையினை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் எழுகிறது. இதனால் எமது பாடசாலையின் புனரமைப்புத் திட்டத்தினை நாமே பொறுப்பேற்று செய்தல் அவசியம் என எம்மால் உணரப்படுகிறது. இதனாற்தான் வெளிநாட்டில் உள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி கோருகிறோம்.

இப்போது வகுக்கப்பட்டுள்ள பாடசாலை புனரமைப்புத் திட்டப்படி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  1. பாடசாலையின் மூன்று வகுப்பறைகள் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டு புதிய வர்ணம் தீட்டப்படும். வகுப்பறை நிலங்களும் சீராக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படும். வகுப்புகளுக்கிடையே சத்தம் உட்புகாத தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, ஒரு வகுப்பின் பாடங்கள் மற்றைய வகுப்பினை இடையூறு செய்யாத வகையில் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.
  2. புதிய வகுப்பறைகள் சகல வசதிகளுடனும் Multimedia வாய்ப்புகளை கற்பித்தலில் பயன்படுத்தக்கூடிய SMART வகுப்பறைகளாக உருவாக்கப்படும்.
  3. பாடசாலையில் அமைந்திருக்கும் மலசலகூடம் முற்றாகப் புதுப்பிக்கப்படும். இது பாடசாலைத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் சித்திவிநாயகர் ஆலய உற்சவ காலங்களில் அடியார்களின் தேவைககளுக்காக, குறிப்பாக பெண்களுக்காகப் பயன்படுத்தப்படக்ககூடிய ஏற்பாடுகளும் மேற் கொள்ளப்படும்.
  4. பாடசாலையின் சுற்றுப்புற மதில் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு பாடசாலையின் சுற்றுப்புறுச் சூழல் அழகு படுத்தப்படும்.

பாடசாலையில் புதுப்பிக்கப்படவுள்ள மூன்று வகுப்பறைகளதும் வரைபடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பாடசாலையின்; மூன்று வகுப்பறைகளும் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அவை காட்சியளிக்கும் விதத்தினை வெளிப்படுத்தும் மாதிரிப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பாடசாலையினை மேற் குறிப்பட்ட வகையில் புனரமைப்புச் செய்து புதுப்பிப்பதற்கு 75 இலட்சம் இலங்கை ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குரோணா பெருந்தொற்று நோய் காரணமாக இப் புனரமைப்பத் திட்டத்தின் விரிவான செலவு மதிப்பீடு இன்னும் பூர்த்தியாகவில்லை. இது கிடைத்தவுடன் அதனைத் தங்களுக்கு அறியத் தருகிறோம்.

பாடசாலைப் புனரமைப்புக்குத் தேவைப்படும் இந் நிதியினை புலம்யெர்ந்து வாழும் பாடசாலை பழைய மாணவர்களிடமும், ஊர்மக்களிடமும் திரட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம். வெளிநாடுகளில் வாழும் எமது ஊர்மக்கள் ஆளுக்கு 20,000 ரூபாவினைப் பங்களிப்புச் செய்தாலே இத் தொகையின எம்மால் திரட்டி விட முடியும். இதனால் பாடசாலை புனரமைப்புத் தேவையான நிதியினைத் திரட்டுதல் என்பது நடைமுறைச்சாத்தியமாதொரு திட்டமாகவே இருக்கிறது.

5. கருத்துகள்ஆலோசனைகள்

எமது பாடசாலையினைப் புனரமைத்துப் புதுப்பிப்பதற்குத் தங்கள் பங்களிப்பைக் கோருவதுடன் இத் திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தந்துதவுமாறும் தங்களை வேண்டுகிறோம்.

மின்னஞ்சல் முகவரி: ariyalaisriparwathy@gmail.com

6. தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்

பெயர்தொலைபேசிமின்னஞ்சல்
இ. கணேஸ் (நோர்வே)+ 4741851123
கு. தவேந்திரன் (நோர்வே)+4799228124
ம. தாரணி (நோர்வே)+4797017090
தா. நகுலேஸ்வரன் (ஜேர்மனி)+497142779429
ந. உருத்திரேஸ்வரன் (பிரித்தானியா)+4477747775683
தா.தியாகசீலன் (பிரித்தானியா)+447551245890
புவனகோபன் (பிரித்தானியா)+447895079780
அ. சுதர்சன் (கனடா)+164726104000Arul.sutha@hotmail.com
ப. ரங்கன் (கனடா)+14163192631rangan.p@hotmail.com
சு. யோகராசா பிரான்ஸ்)+33781813886
இ. சடகோபன் (அரியாலை)+94770871950
மு. ஸ்ரீராஜலிங்கம் (அவுஸ்திரேலியா)+61414608584
திரு ரவிச்சந்திரன் (அதிபர்)+94776640528

7. வங்கி விபரங்கள்

Bank – Norway:

Ariyalai Sriparwathy Vidyasalai Old Student Association – Norway

Bank a/c: 1506 45 77449

Bank – Sri Lanka:

Ariyalai Sri Parwathy Vidyalayam

SDA Account

Account no: 1041001170061185

Main Street branch

Jaffna

Bank code 7135

Swift code: PSBKLKLX023

(அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் வழங்கிய செய்தி)