அமரர். சந்திரா சோதிநாதன்.

அரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா சோதிநாதன் (ஆங்கில ஆசிரியர் – இலங்கை, தொலைபேசி திணைக்கள உத்தியோகஸ்தர் – இங்கிலாந்து) அவர்கள் 17.06.2020ஆம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைத்துவிட்டார்.

அன்னார் காலம்சென்ற கனகரட்னம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்ற கந்தையா சோதிநாதன் (இங்கிலாந்து பிறென்ற் தமிழ் சங்கத்தின் நிறுவனர்) அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற பானுமதி துரைசாமி (ஆங்கில ஆசிரியர், ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை, மகேஸ்வரி வித்தியாலயம்) காலம்சென்ற கனகரட்னம் விஸ்வநாதன் (தபால் அதிபர், கொழும்பு) மற்றும் கனகரட்னம் குகநாதன்  (ஆசிரியர், இங்கிலாந்து) ஆகியோரின் நேசமிகு சகோதரியும், ரோய், தாண்யா, கயலி ஆகியோரின் பாசமிகு தாயாரும், அந்தோணி அவர்களின் மாமியாரும், ஃபிரிடா அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

COVID 19 சூழ்நிலையை கருத்தில்கொண்டு அன்னாரின் புதவுடலை பார்வையிடுவதற்கு அல்லது இறுதி கிரிகையில் கலந்துகொள்வதற்கு விரும்புபவர்கள் Hayley.sothinathan@gmail.com  என்னும் மின்னஞ்சல் முகவரி ஊடாக அறியத்தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
14,  Tulsi house,
Chruch gardens,
HA0 3RA.

தகவல் : குடும்பத்தினர்.