மரண அறிவித்தல் அமரர். மயில்வாகனம் சிவகுமார்.

அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமார் என அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் சிவகுமார் அவர்கள் 28.10.2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகேஸ்வரி அவர்களின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற கோபாலசிங்கம் மற்றும் பத்மாவதி அவர்களின் அன்பு மருமகனும், பத்மினியின் ஆருயிர் கணவரும், சயேந்திரன், சயந்திகா (யாழ். போதனா வைத்தியசாலை) சஞ்சய் (சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. சத்தியரூபன் (யாழ். போதனா வைத்தியசாலை) விந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவஸ்தியின் அன்பு பேரனும், சிவயோகேஸ்வரி, விஜயகுமார், ஜெயக்குமார், வசந்தகுமார், கிருஷ்ணகுமார், காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும், குகதாசன், செல்வராணி, பவாணி, மகேந்திரன், பானுசல்யா, விக்னேஸ்வரன், வசந்தி, ரஜினி, திவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல. 109, புங்கன்குளம் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 31.10.2019 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.