அமரர். குமாரசாமி முத்துக்குமாரசாமி.

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி முத்துக்குமாரசாமி  (மொழிபெயர்ப்பாளர், இலங்கை தேர்தல் திணைக்களம்) அவர்கள் 09.05.2020ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுமனா பெர்னான்டோ அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் பத்மாவதி மாணிக்கராஜா, காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் யசோதாதேவி கிருஷ்ணபிள்ளை, உருத்திராதேவி சவுந்தரராஜா, பாசுபதன், வாசவன், கெங்ககாதரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி பாக்கியநாதன் மற்றும் மாணிக்கராஜா, காலஞ்சென்ற சரோஜினி சரவணபவன், கிருஷ்ணபிள்ளை மற்றும் சவுந்தரராஜா, தேம்பமலர் பாசுபதன், சுதாமதி வாசவன், கமலாசனி கெங்காதரன், விஜயகுமாரி ஐங்கரன் ஆகியோரின் மைத்துனரும், குகேந்திரநாத், துஷாராணி புவனேந்திரன், பாலேந்திரநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10.05.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு Supreme Funeral Parlour, 2/2 Elvitigala Mawatha, Colombo 08 இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து காலை 10:00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகன கிரியைகளுக்காக காலை 11:30 மணியளவில் பொரளை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : மு. குகா (மகன்) 0044 7545 147890

Leave a Reply

Your email address will not be published.