எமது நிலையத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாநகர சபை சுகாதார உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் உத்தியோகத்தர்களுக்கான மதியபோசன நிகழ்வும் நிலையத்தலைவர் தலைமையில் இன்று நண்பகல் நிலைய முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர், ஆணையாளர், மேற்பார்வையாளர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், நிலைய நலன்விரும்பிகள் பங்குபற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய அனைவருக்கும் இதற்கு அனுசரணை புரிந்த அமரர் நாகலிங்கம் செல்லத்துரை அவர்களது ஆறாம் ஆண்டு ஞாபகார்த்தமாக செல்வன் துசாந் தர்மேந்திரா,செல்வி தர்ஷனியா தர்மேந்திரா சகோதரர்களுக்கும் நிலைய நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.